வேட்பு மனுவுக்கு 3 நாட்களே வாய்ப்பு இடைத்தேர்தல் குறித்து கலெக்டர் தகவல்
வேட்பு மனுவுக்கு 3 நாட்களே வாய்ப்பு இடைத்தேர்தல் குறித்து கலெக்டர் தகவல்ஈரோடு, :ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், 10 முதல், 17 வரையிலான வேட்பு மனுத்தாக்கலில், 10, 13, 17 என மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.ஈரோடு கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜகோபால் சுன்கரா, நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வரும், 10ம் தேதி முதல், 17ம் தேதி வரை வேட்பு மனு பெறப்படும். இதில், அரசு விடுமுறை நீங்கலாக, 10, 13, 17 என மூன்று நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய இயலும். காலை, 11:00 மணி முதல் மதியம், 3:00 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.தேர்தலுக்காக, 3 பறக்கும் படை, 1 வீடியோ கண்காணிப்பு குழு, 1 வீடியோ பார்வைக்குழு ஆகியவை உடனடியாக நியமிக்கப்படுகிறது. 3 நிலை கண்காணிப்பு குழு, 1 கணக்கு தணிக்கை குழு ஆகியவை வேட்பு மனுத்தாக்கல் துவங்கும், 10ல் அமைக்கப்படும்.பறக்கும் படை குழுவில் 'எக்ஸிக்யூட்டிவ் மேஜிஸ்ட்ரேட்' நிலை அதிகாரி ஒருவர், எஸ்.ஐ., -1, போலீஸ்-2, ஒரு வீடியோ கிராபர் இருப்பார்கள். தலா, 8 மணி நேரம் என, 24 மணி நேரமும் செயல்படுவர். தேர்தல் நடத்தை விதிகள், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு மட்டும் பொருந்தும். பிற சட்டசபை தொகுதிகளுக்கு பொருந்தாது. மத்திய ஆயுதப்படை போலீஸ், தேவை அடிப்படையில் கோரப்படும். மாவட்டத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடி அறிந்த பின், அதற்கான முயற்சி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.