வி.ஏ.ஓ., மீது லஞ்ச புகார்விசாரிக்க கலெக்டர் உத்தரவு
ஈரோடு:சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலையை சேர்ந்த ராஜா, இருட்டிபாளையம் கோதண்டராமன் உட்பட சிலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:குத்தியாலத்துார் வி.ஏ.ஓ., விஜயபாஸ்கர், முழு ஆவணம் வழங்கினாலும், எதையாவது காரணம் கூறி விண்ணப்பத்தை தள்ளுபடி செய்கிறார். அலுவலகத்தில் பெரும்பாலும் இருப்பதில்லை. கேட்டால் நில அளவை செய்ய சென்றதாக கூறுகிறார். நில அளவைக்கும் மிகப்பெரிய தொகை பெறுகிறார். இதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை கோரியும், குத்தியாலத்துார் மக்கள் சார்பில், கடம்பூர் வி.ஏ.ஓ., அலுவலகம் முன், மே, 5ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, கோபி சப் கலெக்டருக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.