உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 100 கிலோ எடைக்கு அதிகமாக பட்டாசு கடையில் இருப்பு கூடாது ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை

100 கிலோ எடைக்கு அதிகமாக பட்டாசு கடையில் இருப்பு கூடாது ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை

ஈரோடு, நிரந்தர, தற்காலிக பட்டாசு உரிமதாரர், பட்டாசு, மத்தாப்பு தயார் செய்யும் நிறுவன உரிமைதாரர்களுக்கான ஆய்வு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:பட்டாசு பொருட்களை உரிமம் பெற்ற இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். உரிமம் பெற்ற இடத்தில், 100 கிலோ அளவுக்கு அதிகமாக பட்டாசு பொருட்களை இருப்பு வைக்கக்கூடாது. உரிம காலத்துக்குள் மட்டுமே பட்டாசு பொருளை வாங்க, விற்க வேண்டும். அதை பதிவேடு மூலம் பராமரிக்க வேண்டும். வெடிபொருளை தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து எடுத்து வரும்போது, உரிய விதியை கடைபிடிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பட்டாசு கடை வைக்க அனுமதி இல்லை. தரைத்தளம் தவிர, மாடிகளிலும், நிலவறைகளிலும் பட்டாசுகளை சேமிக்க கூடாது. தீப்பிடிக்காத உலோகங்களினால் ஆன கூரை அமைக்க வேண்டும்.பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, தியேட்டர், கடைகள், சந்தை, தொழிற்சாலைகள், வழிபாட்டு தலம், குடியிருப்புகள், ரயில்வே பாதை, நெடுஞ்சாலை, நீர் நிலை, உயர் மின்னழுத்த கம்பிகள், அணைக்கட்டு ஆகியவற்றில் இருந்து, 50 மீட்டர் துாரத்துக்கு அப்பால் பட்டாசு கடை அமைக்க வேண்டும். எதிர் எதிரே பட்டாசு கடை வைக்க கூடாது. கடை அருகே சமையல் செய்தல், எல்.பி.ஜி., சிலிண்டர் வைக்க கூடாது என்பது உட்பட பிற விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஆர்.டி.ஓ., சிந்துஜா, டி.எஸ்.பி., தங்கவேல், தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி