உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி, பள்ளி மாணவன் தற்கொலை

கல்லுாரி, பள்ளி மாணவன் தற்கொலை

சென்னிமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி, கே.மாமனத்தாள் ரோடு பகுதியில் வசிக்கும் காமராஜ் மகன் ரகுபதி, 18; சென்னிமலை அருகே எம்.பி.என்.எம்.ஜெ., பொறியியல் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்தார்.கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். நேற்று மாலை விடுதியில் இருந்த ரகுபதி, திடீரென அறைக்கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். விடுதியில் தங்கியிருந்த மற்ற நண்பர்கள் கதவை தட்டியும் திறக்காததால், கல்லுாரி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மின் விசிறியில் லுங்கியால் துாக்கிட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார். மாணவனை மீட்டு சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ரகுபதி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.பள்ளி மாணவன் விபரீதம்-சென்னிமலை யூனியன் ஓட்டப்பாறை ஊராட்சி ஒட்டங்காட்டை சேர்ந்த தம்பதி கோபால் - திவ்யா மகன் கவுரிஸ், 12; சென்னிமலையில் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இரு சம்பவம் குறித்தும் சென்னிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி