உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி மாணவி, சிறுமி மாயம்

கல்லுாரி மாணவி, சிறுமி மாயம்

ஈரோடு, ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சொட்டு நீர் பாசன தொழில் செய்யும் சதாசிவம் மகள் ஹயன்திகா, 24. தஞ்சாவூரில் உள்ள கல்லுாரியில் எம்.டெக். இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த, 16ல், மகள் கல்லுாரிக்கு செல்லாத விபரம் அறிந்து சதாசிவம், மகளின் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. காணாமல் போன மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என, ஈரோடு சூரம்பட்டி போலீசில் சதாசிவம் புகார் செய்தார்.* ஈரோடு, வில்லரசம்பட்டி போயஸ் கார்டனை சேர்ந்த, 18 வயது சிறுமி ஈரோட்டில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த, 17 காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தகவல் இல்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை