சாலையில் தங்கச்சங்கிலிஸ்டேசனில் ஒப்படைத்த கான்ஸ்டபிளுக்கு பாராட்டு
காங்கேயம், காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பாலுசாமி, 35; காங்கேயம் - பழையகோட்டை ரோட்டில் நடைபயிற்சியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தார். வாய்க்கால்மேடு பகுதி அருகே சென்றபோது, சாலையில் ஒரு பவுன் மதிப்புள்ள தங்கச்சங்கிலி கிடப்பதை பார்த்தார். அதை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.நகை உரிமையாளரை கண்டுபிடித்து, ஒப்படைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தங்கச்சங்கிலியை ஒப்படைத்த பாலுசாமிக்கு, போலீசார் மட்டுமின்றி மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.