மேலும் செய்திகள்
சமுதாய வளைகாப்பு
05-Mar-2025
பவானி : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், அந்தியூரில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் தலைமை வகித்தார்.உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி விழாவை துவக்கி வைத்து, 75 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருள், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். இதை தொடர்ந்து, அந்தியூர் வார சந்தையில், 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவருந்தும் கூடம் மற்றும் பராமரிப்பு செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கினர். தி.மு.க., மாணவரணி சார்பில் நடந்த உயர் கல்வி கருத்தரங்கில் அமைச்சர்கள் இருவரும் பங்கேற்றனர்.விழாவில் ராஜ்யசபா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்,பி., பிரகாஷ், கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரக்குமார், முன்னாள் எம்எல்ஏ., குருசாமி, டி.ஆ.ர்ஓ., சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
05-Mar-2025