உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணினி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்

கணினி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்

கோபி, டிச. 15-தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், கோபியில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து வகை கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சேர்க்கைக்கு, ௧௦ சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடத்தை, முதுகலை ஆசிரியர் கணினி அறிவியல் பணியிடமாக பெயர் மாற்றம் செய்து, பணிவரன்முறை ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !