சாக்கடையில் விழுந்த கட்டட தொழிலாளி பலி
ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலையை சேர்ந்தவர் அப்துல்லா, 50; கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். அப்துல்லாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனைவி, குழந்தைகளை பிரிந்து தாயாருடன், ஈரோடு அய்யனாரப்பன் கோவில் வீதியில் அப்துல்லா வசித்தார். கடந்த, 5ம் தேதி நள்ளிரவில் மது போதையில் சாக்கடையில் விழுந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.