பைக்குகள் மோதியதில் கட்டட தொழிலாளி பலி
கோபி, கோபி அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்டதில், கட்டட தொழிலாளி பலியானார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி ரவிக்குமார், 35; கோபி அருகே தண்ணீர்பந்தல்புதுார் என்ற இடத்தில், பஜாஜ் டிஸ்கவர் பைக்கில், நேற்று முன்தினம் இரவு சென்றார். கூத்தாண்டிபாளையத்தை சேர்ந்த தேவராஜ், 40, ஓட்டி வந்த டி.வி.எஸ்., ஜஸ்ட் பைக் மோதியதில், ரவிக்குமார் காயமடைந்தார்.சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி விஜயலட்சுமி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.