மேலும் செய்திகள்
அறிவாலயத்தில் ஆலோசித்து விஜய்க்கு நிபந்தனைகள்
13-Sep-2025
அந்தியூர் அந்தியூரிலிருந்து சென்னம்பட்டி கொமராயனுார் வரை, வனப்பகுதியை ஒட்டி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை பட்டா வகை நிலங்கள், ஜீரோ வேல்யூவாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை நீக்கக்கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். இது சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம்,வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமையில் இன்று காலை, 10:௦௦ மணிக்கு நடக்கிறது. அந்தியூர்- பர்கூர் ரோட்டில் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில், நிபந்தனை பட்டா மீது வருவாய் து நடவடிக்கை மற்றும் நிபந்தனையை நீக்குதல் தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளனர். கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
13-Sep-2025