உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டுறவு துறை ஊழியர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு துறை ஊழியர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

ஈரோடு,தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு, சூரம்பட்டி, கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன், இரண்டாவது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.கூட்டுறவு துறை பதவி உயர்வில், கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு செய்து தர வேண்டும். காணொலி ஆய்வு கூட்டத்தை தவிர்க்க வேண்டும். 20 கோடி ரூபாய்க்கு மேல் கடன் நிலுவை வைத்துள்ள பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்க வேண்டும். தனியார் தொழில் முனைவோர் நடத்தும் முதல்வர் மருந்தகங்களுக்கு லாபத்தை அதிகரித்து தரும் நோக்கில், கூட்டுறவு சார்பதிவாளர்களை பயன்படுத்தக்கூடாது.அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், தாயுமானவர் திட்டத்தை, 2 தினங்களில் செயல்படுத்த அழுத்தம் தருவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை