மேலும் செய்திகள்
தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
12-Jun-2025
டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுாரில், கொடிவேரி செல்லும் வழியில் பங்களாபுதுார் புதுார் எஸ்.ஐ., பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு டூவீலர்களில் வந்த இருவர், போலீசை பார்த்தவுடன் பைக்கை போட்டு விட்டு ஓடினர். போலீசார் துரத்தியதில் ஒருவர் சிக்கினார். விசாரணையில் டி.ஜி.புதுாரை சேர்ந்த பாஸ்கரன், 40, என்பதும், தப்பியவர் அதே ஊரை சேர்ந்த லோகேஷ் என்பதும் தெரிந்தது. நண்பர்களான இருவருக்கும் பண கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முடிவு செய்து, 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளை டூவீலரில் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். 3.92 லட்சம் ரூபாய் கள்ளநோட்டு, இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர். பாஸ்கரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லோகேஷை தேடி வருகின்றனர்.
12-Jun-2025