உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தலைமதகில் விரிசல் சீரமைப்பு

தலைமதகில் விரிசல் சீரமைப்பு

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி - ரக்கன்கோட்டைக்குக்கு திறக்கப்படும் தண்ணீரால், 24 ஆயி-ரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரு தலைமதகு வாய்க்காலில் உள்ள 11 ஷட்டர்களை, கையால் சுழற்றி இயக்கும் முறைக்கு மாறாக, மின்மோட்டார் மூலம் இயக்கும் திட்டப்பணி நடக்கிறது. இந்நிலையில் தடப்பள்ளி வாய்க்காலின் தலைமதகை தாங்கி நிற்கும் கான்கிரீட் மேடை கட்-டமைப்பில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, விரிசல் விழுந்த பகுதியை, நீர்வள ஆதாரத்-துறையினர் மறுசீரமைப்பு பணி மேற்கொண்டனர். மேடையில் விரிசல் விழுந்த பகுதி, பக்கவாட்டு பகுதி மற்றும் படிக்கட்டு பகுதி சீரமைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை