உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

ஈரோடு:சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற, கொ.ம.தே.க., பொதுச் செயலர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: லாரி தொழில் பல்வேறு சிரமங்களில், நடத்த முடியாத நிலையில் உள்ளது. இச்சூழலில் சுங்க கட்டண உயர்வு, தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகிறது. 60 கி.மீ.,க்கும் குறைவான இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகளையும், நகர்ப்புற சுங்கச்சாவடிகளையும், காலாவதி சுங்கச்சாவடிகளையும் அகற்ற பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதேநிலை நீடித்தால் சுங்கச்சாவடியால் லாரி தொழில் முற்றிலும் முடங்கும். இவ்வாறு இருக்க சுங்கச்சாவடி கட்டணம் உயர்வை ஏற்று கொள்ள இயலாதது. உடன், சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன், காலாவதி சுங்கச்சாவடிகள், 60 கி.மீ.,க்கு குறைவான சுங்கச்சாவடிகள், நகர்ப்புற சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !