உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தடுப்பணை வளாகத்தில் கழிப்பிட கதவு சேதம்

தடுப்பணை வளாகத்தில் கழிப்பிட கதவு சேதம்

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வளாகத்தில், இரு பாலருக்கான கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் ஆண்களுக்கான கழிப்பிடத்தில், ஒரு அறையின் கதவு மட்டும் கழன்ற நிலையில், தனியாக ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் ஆண்கள் எவரேனும், அந்த கதவை சேதப்படுத்தியிருக்கும் வாய்ப்புள்ளது. இதனால் அந்த கழிப்பிடம், பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. எனவே, நீர்வள ஆதாரத்துறையினர் கழிப்பிடத்தின் கதவை சீரமைத்து, பயன்பாட்டுக்கு உகந்ததாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ