உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழில் கடன் பெற டாம்கோ அழைப்பு

தொழில் கடன் பெற டாம்கோ அழைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்-மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழ்நாடு சிறுபான்-மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம், தனி நபர் கடன், குழுக்களுக்கு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் வழங்கப்படுகிறது. விண்-ணப்பதாரர், 18 முதல், 60 வயதுக்கு உட்பட்டவர், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமான அடிப்படையில் திட்டம்-1, 2 ன்படி கடன் வழங்கப்படும். திட்டம்-1ல் ஆண்டு வருவாய் கிராமப்புறத்தில், 98,000மும், நகர்புறத்தில், 1.20 லட்சமும் இருந்தால், 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர், தங்களது ஜாதி, வரு-மான, இருப்பிட சான்று, ஆதார் நகல், திட்ட தொழில் அறிக்கை-யுடன், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல-கத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி