மேலும் செய்திகள்
வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
25-Oct-2024
கோபி, நவ. 3-கவுந்தப்பாடி அருகே பி.வி.கே., வீதியை சேர்ந்தவர் ரஞ்சனி, 20; இவரின் கணவர் மணிகண்டன், ௨௬; காதலித்த இருவரும் பெற்றோர் சம்மதத்துடன், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். ஒரு ஆண் குழந்தை உள்ளது. மாமனார் ரவிச்சந்திரன், 50, மாமியார் ஈஸ்வரி, 45, பேரக்குழந்தையை நேற்று முன்தினம் எடுத்தபோது, ரஞ்சனி கொடுக்க மறுத்துள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறால், யூக்லிப்டஸ் தைலத்தை ரஞ்சனி எடுத்து குடித்து விட்டார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ரஞ்சனியின் தாய் மகாலட்சுமி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Oct-2024