அரசு பணியில் உள் ஒதுக்கீடு கோரி முறையீடு
ஈரோடு, சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன் தலைமையில், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கிராம உதவியாளர் பணிக்கு நேரடி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இப்பணி நியமனத்தில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. மாறாக பட்டியலின மக்களுக்கு பொது பிரிவு என வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்து, திருத்தம் செய்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.