உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு : தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்-தியும், நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகிய-வற்றை நிறுத்த முயற்சி செய்யும் தி.மு.க., அரசை கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். இதில் கழக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணன், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னையன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் வீரகுமார், பகுதி கழக செயலா-ளர்கள், மாவட்ட, மாணவரணி செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை