உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் சிக்கிய மாநகராட்சி துணை கமிஷனர் கார்

விபத்தில் சிக்கிய மாநகராட்சி துணை கமிஷனர் கார்

ஈரோடு, ஈரோட்டில், இரவில் மாநகராட்சி பெண் துணை கமிஷனர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஈரோடு மாநகராட்சி துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. நேற்று முன்தினம் இரவு 7:35 மணியளவில் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, அரசால் வழங்கப்பட்ட ஸ்கார்பியோ காரில் வெளியே சாலைக்கு வந்தார். காரை டிரைவர் லாரன்ஸ் ஓட்டியுள்ளார்.மாநகராட்சிக்கு எதிரே திரும்பிய கார், எம்.எஸ். சாலையில் செல்ல முற்பட்டது. அப்போது ப.செ.பார்க்கில் இருந்து எம்.எஸ். சாலையில் நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் இருந்த வந்த டிசையர் வாடகை காரை செல்வகுமார் ஓட்டி வந்தார். காரில் மூவர் இருந்தனர். மாநகராட்சி துணை கமிஷனர் சென்ற ஸ்கார்பியோ கார் மீது பக்கவாட்டில் மோதியது. இதில் இரு கார்களின் பக்கவாட்டு பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரு கார்கள் மோதியதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு கார்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ