ரூ.1.64 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில், 1.64 கோடி ரூபாயில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.காசிபாளையம் பகுதியில் சிறப்பு நிதி திட்டத்தில், 40 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை நவீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.பின், முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி- 1ல், 40 லட்சம் ரூபாயில் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, அண்ணா நகர் நாவீதர் காலனியில், 75 லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி உட்பட, 1.64 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.ஈரோடு கொங்கு கலையரங்கில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை பார்வையிட்டார்.