மேலும் செய்திகள்
கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தெப்போற்சவம்
06-Oct-2025
ஈரோடு:ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்வர். நடப்பாண்டு புரட்டாசி சனிக்கிழமை நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியருளினார். இதையொட்டி ஆஞ்ச நேயருக்கு வடமாலை சாற்றப்பட்டது.அதேசமயம் ஆண்டுதோறும் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையன்று, பெருமாளின் சகோதரியான கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து சீர் வரிசைகளாக பூ, பழம், இனிப்பு மற்றும் கார வகைகள் அனுப்பி வைக்கப்படும். இதன்படி கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து பெருமாளுக்கு சீர்வரிசையை பக்தர்கள் ஊர்வலமாக நேற்று மாலை எடுத்து சென்றனர்.நடப்பாண்டு, 17ம் ஆண்டு சீராக, இனிப்பு, பழங்கள், ஆபரணங்கள், உடை, பூ என, 200க்கும் மேற்பட்ட தட்டுகளில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து, கஸ்துாரி அரங்கநாதர் கோவில் மூலவருக்கு படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
06-Oct-2025