டி.ஐ.ஜி., ஆய்வு டி.ஐ.ஜி., ஆய்வு
ஈரோடு:ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், நேற்று வருடாந்திர ஆய்வு செய்தார். மாவட்ட தனிப்பிரிவு, சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு, கைரேகை மற்றும் தடயவியல் பிரிவுகளை நேரடி ஆய்வு செய்தார். ஆவண பதிவேடுகள் பிரிவை பார்வையிட்டு, பராமரிப்பு விபரம் கேட்டறிந்தார். மாவட்ட அளவில் நடப்பாண்டில் நிகழ்ந்த குற்ற வழக்கு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிலுவை குற்ற வழக்குகளின் நிலை குறித்து எஸ்.பி., சுஜாதாவிடம் கலந்தாலோசித்தார். நாளை நடக்கவுள்ள இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கேட்டறிந்தார்.