உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தம்பதி கொலையில் முக்கிய தடயமான பட்டன் போன் டி.ஐ.ஜி., - எஸ்.பி., சிவகிரியில் முகாமிட்டு விசாரணை

தம்பதி கொலையில் முக்கிய தடயமான பட்டன் போன் டி.ஐ.ஜி., - எஸ்.பி., சிவகிரியில் முகாமிட்டு விசாரணை

ஈரோடு: சிவகிரியில் தம்பதி படுகொலையில், காணாமல் போன மொபைல்போனை, முக்கிய தடயமாக கருதி, அதை கண்டறிய போலீசார் தீவிரம் காட்டுகின்றனர்.சிவகிரி, விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை சேர்ந்த தம்பதி ராமசாமி, 72, பாக்கியம், 63; தோட்ட வீட்டில் தனியே வசித்த இருவரும், மர்ம கும்பலால் கொலை செய்யப்-பட்டனர். கடைசியாக கடந்த, 28ம் தேதி காலை, மகள் பானுமதி பெற்றோருடன் போனில் பேசியுள்ளார். மே, 1ம் தேதி காலை போன் செய்தபோது நீண்ட நேரமாக எடுக்கவில்லை. இதனால் சந்தேகம-டைந்து உறவினரை பார்க்க அனுப்பிய பிறகே, இருவரும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கொலையாளிகளை, 10 தனிப்படை அமைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பாக்கியத்தின் முன்புற நெற்றியில் மூன்று இடங்களிலும், ராம-சாமியின் பின்புற தலை, முன்புற நெற்றியில் இரு இடங்க-ளிலும் கம்பி அல்லது கட்டை (பிளெண்டட் வெப்பன்) போன்ற ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்க கூடும். கொலையான தம்பதி வைத்திருந்த ஒரு பட்டன் டைப் மொபைல் போன் மாயமாகி உள்ளது. அது தற்போது சுவிட்ச் ஆப்பாக உள்ளது. கடைசியாக சுவிட்ச் ஆப் ஆன டவர் லொகேஷன் கண்-டறியும் பணி நடக்கிறது. இதுவரை தனிப்படையினர் பிற மாவட்டங்களுக்கு செல்லவில்லை. ஒரே ஒரு 'சிசிடிவி' கேமரா பதிவு கிடைத்துள்ளது. அதை விரிவாக்கம் செய்ய தீவிரம் காட்டி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தால் விசார-ணையை துரிதப்படுத்த ஏதுவாக இருக்கும். சிவகிரியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரியும் நபர்களிடம் விசாரணை செய்கிறோம். குறிப்பிட்ட ஆறு மாத இடைவெளியில் ஈரோடு, திருப்பூரில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவம் நடக்கிறது. இதனால் ஏதோ ஒரு கும்பல் திட்டமிட்டு, தீவிரமாக கண்காணித்து தங்களுக்கு சாதமான சூழல் வரும் போது சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். கோவை டி.ஐ.ஜி., சசிமோகன், ஈரோடு எஸ்.பி., சுஜாதா ஆகியோர், சிவகிரியில் முகாமிட்டு விசாரிக்கின்றனர்.விவசாயிகள் போராட்டம்இதற்கிடையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மோளபாளையம் நால்ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, சமூக செயல்பாட்டாளர் முகிலன் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டில், 15 விவசாயிகள் ஒரே முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இன்றும் ஆர்ப்பாட்டம்சிவகிரி, குமரன் சிலை முன் பா.ஜ., சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.இதேபோல் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டுபி-டிக்க வலியுறுத்தி, விளக்கேத்தி நால்ரோட்டில் மாநகர மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இன்று காலை, 9:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை