உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

பெருந்துறை: பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளியில் மாற்றுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கிராம கல்வி குழுத்தலைவர் பல்லவிபரமசிவன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தார். பள்ளியில் கட்டப்பட்டுள்ள டைல்ஸ் பதித்த வகுப்பறையை பெருந்துறை யூனியன் தலைவர் திருநாவுக்கரசு திறந்து வைத்தார். மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் மாற்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அனைவருக்கு கல்வி இயக்கம் மூலம் கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார்.பெருந்துறை வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ், நலிவுற்ற மாணவ, மாணவியர்களுக்கு உடைகளை வழங்கினார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் குணசெல்வி, மாணவி கௌசல்யாவுக்கு இன்ஸ்பயர் சான்றிதழை வழங்கி பேசினார். பெருந்துறை ஸ்ரீராம் ஸ்டில்ஸ் பங்குதாரர் ராஜா, பெருந்துறை பிரைட் மார்பிள்ஸ் சரவணன், பெருந்துறை ரவி டைலர்ஸ் ரவிசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் பிரசாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி