உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுதந்திர தின விழா ஈரோட்டில் "உஷார்

சுதந்திர தின விழா ஈரோட்டில் "உஷார்

ஈரோடு: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று ஈரோட்டில் தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இன்று 65வது சுதந்திர தின விழா கொண்டாப்படுகிறது. இதற்காக, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, சுதந்திர போராட்ட விரர்கள் சிலை உள்ளிட்ட அனைத்தும் புதுபொழிவுடன் தாயார் நிலையில் உள்ளது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில், பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவும் அபாயம் உள்ளதாக கருதி தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸாரை குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, வ.உ.சி. பூங்கா, பி.எஸ். பார்க், பி.பி. அக்ரஹாரம் ஆகிய பகுதியில் உள்ள காந்தி சிலை உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை