உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.என்.பாளையம், நம்பியூரில் மக்காச்சோளம் அறுவடை

டி.என்.பாளையம், நம்பியூரில் மக்காச்சோளம் அறுவடை

கோபிசெட்டிபாளையம்: கோபி, டி.என்.பாளையம் மற்றும் நம்பியூர் வட்டாரங்களில் மக்காச் சோளம் அறுவடை துவங்கி உள்ளது. இங்கிருந்து, நாமக்கல், கோவை மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், கோவை, கரூர், பழனி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கோ 1 மற்றும் கோ ஹெச் (எம்)-4 ஆகிய, மக்காச்சோளம் ரகங்கள் பயிரிடப்படுகிறது. கோழி மற்றும் மாடுகளுக்கு முக்கிய தீவனமாகவும், பாப்கார்ன், சூப் உள்பட உணவுப் பொருளாகவும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் இரவை மற்றும் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கோபி, டி.என்.பாளையம், நம்பியூர், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, அத்தாணி, கணக்கம்பாளையம், கூகலூர், பாரியூர், கொளப்பலூர், சிறுவலூர், வெள்ளாங்கோயில், காசிப்பாளையம், குருமந்தூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், நடப்பு போகத்தில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது. இங்கிருந்து, சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டம் பல்லடம், கேரளா பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி