ஈரோடு: கட்சி பாகுபாடின்றி அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க.,
சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து,
ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அனைத்து கட்சியிலும் மேயர்
பதவிக்கு 15 முதல் 25 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 5,000
ரூபாய், நகராட்சி தலைவருக்கு 10 ஆயிரம், கவுன்சிலருக்கு 2,000 ரூபாய்,
டவுன் பஞ்சாயத்து தலைவருக்கு 2,500 ரூபாய், கவுன்சிலருக்கு 500 ரூபாய்,
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு 5,000 ரூபாய், யூனியன் கவுன்சிலருக்கு
2,000 ரூபாய் செலுத்தி, விருப்ப மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
அ.தி.மு.க.,வில் ஈரோடு மாவட்டத்தில், எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர்
பாண்டியன் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது. ஈரோடு மாநகராட்சி மேயர்
பதவிக்கு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கே.சி.பழனிசாமி, மாநகர
செயலாளர் மனோகரன், மகளிரணி சாந்தி, சூரம்பட்டி நகர செயலாளர் ஜெகதீசன்,
முன்னார் நகர செயலாளர் கவுரிசங்கர், ராஜ்குமார், நகர பேரவை செயலாளர்
ராஜேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், மகளிரணி
செயலாளர் மல்லிகா, பெரியசேமூர் நகர செயலாளர் சக்தி, காசிபாளையம் நகர
செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வீரப்பன்சத்திரம் நகர செயலாளர் கேசவமூர்த்தி உட்பட
23 பேர் விருப்ப மனு அளித்தனர். நகராட்சி தலைவர் முதல் பஞ்சாயத்து தலைவர்
பதவி வரையிலான 1,264 பதவிக்கு; 1,800 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். *
தி.மு.க.,வில் மாநகராட்சி மேயர் பதவிக்கு சிட்டிங் மேயர் குமார்முருகேஸ்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பழனிசாமி, மார்க்கெட் ராஜா, சூரம்பட்டி நகராட்சி
தலைவர் லோகநாதன், எல்லப்பாளையம் சிவகுமார், மதர் இந்தியா லோகநாதன்,
பொன்சுகுமார், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், காசிப்பாளையம் நகராட்சி
தலைவர் சுப்பிரமணியன், பெரியசேமூர் நகராட்சி தலைவர் சுப்பிரமணியம்,
சூரியம்பாளையம் நகராட்சி தலைவர் பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலாளர்
செல்லப்பொன்னி, கவுன்சிலர் சீதாகதிர்வேல் என 13 பேர் மனுத்தாக்கல்
செய்தனர். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 300 பேரும், பிற பதவிகளுக்கு
1,033 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். * தே.மு.தி.க.,வில் மாநகராட்சி
மேயர் பதவிக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட அவைத்தலைவர்
பொன்சேர்மன், நமச்சிவாயம் உட்பட 11 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 100
பேரும், பிற பதவிகளுக்கு 600 பேரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.