உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 14 ஆண்டாக மனு வழங்கியும் வாகனம் தராமல் இழுத்தடிப்பு மாற்றுத்திறனாளி கொதிப்பு

14 ஆண்டாக மனு வழங்கியும் வாகனம் தராமல் இழுத்தடிப்பு மாற்றுத்திறனாளி கொதிப்பு

ஈரோடு, அரச்சலுார் அருகே வடபழனி, குமரன் நகரை சேர்ந்தவர் தேவராஜ். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:நான் கிணறு வெட்டும் பணி, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். 14 ஆண்டுக்கு முன் கிணறு வெட்டும் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் இரு கால்களும் செயலிழந்து, நடமாட முடியாமல், கைகளில் ஊன்று கோலை பிடித்து நடக்கிறேன். தமிழக அரசு மூலம் மாதம் தோறும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுகிறேன். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஸ்கூட்டி வாகனம் கோரி ஆன்லைனிலும், நேரிலும் விண்ணப்பித்துள்ளேன். கடந்த, 14 ஆண்டாக பல முறை மனு வழங்கியும் மனுவை தள்ளுபடி செய்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் பெருந்துறைக்கு நாளை வருகிறார். அன்று பெருந்துறையில் எனது குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை