மேலும் செய்திகள்
தீபாவளி சில்லரை ஜவுளி விற்பனை
17-Sep-2025
ஈரோடு, ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள கனி மார்க்கெட் வணிக வளாகம், மணிக்கூண்டு சாலை, டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதிகள், காந்திஜி சாலை, பனியன் மார்க்கெட் பகுதி, ஆர்.கே.வி., சாலையிலும் தீபாவளிக்கான கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை நடந்த சந்தையில், 3,000க்கும் மேற்பட்ட வாரச்சந்தை கடைகள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் நேரடி கடைகள், வாகனங்கள், குடோன்களில் வைத்து விற்பனை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில மக்கள், வியாபாரிகள், கடைக்காரர்கள் குவிந்தனர். இதுபற்றி, வியாபாரிகள் கூறியதாவது: கடந்த நான்காண்டுகளில் இந்தாண்டு விற்பனை நன்றாக அமைந்துள்ளது. அவ்வப்போது லேசான மழை பெய்தாலும், விற்பனை, வந்து செல்லும் மக்கள் பாதிக்காத வகையில் உள்ளது. தீபாவளிக்காக பனியன் மார்க்கெட் வரும் சனிக்கிழமை (18) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
17-Sep-2025