தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
ஈரோடு:ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர்கள் முத்துசாமி, நல்லசிவம் ஆகியோர் கூட்டறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க., மகளிரணி சார்பில் இன்று (31) காலை, 10:00 மணிக்கு ஈரோடு காளை மாட்டு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் அனைத்து நிலை நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.