உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டாக்டர் ஆர்.ஏ.என்.எம்., கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா

டாக்டர் ஆர்.ஏ.என்.எம்., கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஈரோடு: ஈரோடு ரங்கம்பாளையம் டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 26வது பட்டமளிப்பு விழா நடந்தது. தி முதலியார் எஜுகேசனல் டிரஸ்ட் தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் பாலுசாமி முன்னிலை வகித்தனர். ஈரோடு எம்.பி., பிரகாஷ், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணைமேயர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முதல் மதிப்பெண் பெற்ற, 15 மாணவ - -மாணவியருக்கு பட்டம் மற்றும் பதக்கம், 238 இளங்கலை, 42 முதுகலை மாணவ - -மாணவியருக்கு பட்டம் வழங்கினர். விழாவில் தி முதலியார் எஜூகேசனல் டிரஸ்ட் பொருளாளர் விஜயகுமார், இணை செயலாளர் அருண்குமார், துணை தலைவர்கள் மாணிக்கம், ராமச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லுாரி முதல்வர் பழனியப்பன் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி