மேலும் செய்திகள்
ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
30-Oct-2024
ஈரோடு, நவ. ௨௪-புன்செய்புளியம்பட்டியில் எஸ்.என்.ஆர்.வித்யா நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. காவல் ஆய்வாளர் சரஸ்வதி கொடியசைத்து துவங்கி வைத்தார். பள்ளி தாளாளர்கள் ராமலிங்கம், சந்தோஷ் முன்னிலை வகித்தனர். பேரணியில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வி.ஆர்.டி நகரில் துவங்கிய பேரணி, எம்.எல்.ஏ., அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றதோடு, போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பி சென்றனர். முடிவில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர். பள்ளி ஆசிரியர்கள், புன்செய்புளியம்பட்டி போலீசார் கலந்து கொண்டனர்.
30-Oct-2024