பாட்டி கழுத்தை அறுத்து கொன்ற போதை பேரன்
தாராபுரம், தாராபுரம் அருகே குடிபோதையில், பாட்டி கழுத்தை அறுத்துக் கொன்ற பேரனை, போலீசார் கைது செய்தனர்.தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்த பெரிய குமாரபாளையத்தை சேர்ந்த பச்சையப்ப கவுண்டர் மனைவி மயிலாத்தாள், 80; கணவர் இறந்த நிலையில், மகன் கோவிந்தராஜுடன் வசித்து வந்தார். மயிலாத்தாளின் பேரன் விஜயகுமார், 40; மனைவியை பிரிந்து வாழ்கிறார். குடிபோதைக்கு அடிமையானவர். நேற்றிரவு, 7:00 மணியளவில், குடிபோதையில் வீட்டுக்கு சென்ற விஜயகுமார், கட்டிலில் படுத்திருந்த மயிலாத்தாள் கழுத்தை அரிவாளால் அறுத்து கொன்றார். தலை துண்டான நிலையில், ஓட்டம் பிடித்தார். தகவலறிந்து சென்ற குண்டடம் போலீசார், தோட்டத்தில் பதுங்கியிருந்த விஜயகுமாரை கைது செய்தனர்.