உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈடிசியா செயற்குழு கூட்டம்

ஈடிசியா செயற்குழு கூட்டம்

ஈரோடு ஈரோடு மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் (ஈடிசியா) நான்காவது செயற்குழு கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, தற்போதைய முக்கிய தேவையான ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்த கேள்வி, சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆடிட்டர் அசோக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு மற்றும் தற்போதைய வரி மாற்றங்கள், இதனால் தொழில் நிறுவனங்கள் பெறும் நன்மைகளை கூறினார்.சங்க உறுப்பினர்களின் சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு தெளிவாக, எளிமையாக பதிலளித்தார். ஈடிசியா நடவடிக்கைகளை செயலாளர் சரவணபாபு தொகுத்து அளித்தார். பொருளாளர் பரத் ஈடிசியாவின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில் ஈடிசியா முன்னாள் தலைவர்கள், நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை