உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் மீது பைக் மோதி முதியவர் பலி

மொபட் மீது பைக் மோதி முதியவர் பலி

ஈரோடு,ஈரோடு, பவானிமெயின் ரோடு அய்யன் தோட்டத்தை சேர்ந்தவர் பழனி (எ) பழனியப்பன், 84. கடந்த 6ம் தேதி மதியம் 2:00 மணிக்கு தனது மொபட்டில், வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது எதிரே, வேகமாக வந்த அப்பாச்சி பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பழனிக்கு, தலை உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ