உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் மோதி மூதாட்டி பலி

பைக் மோதி மூதாட்டி பலி

ஈரோடு, மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி காங்கேயம் பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சம்பூர்ணம், 65. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சாவடிபாளையத்தில் உள்ள, மகள் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன் சம்பூர்ணம் வந்திருந்தார். நேற்று காலை வீட்டின் அருகேயுள்ள கடைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு, சாவடிபாளையத்தில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த கே.டி.எம். பைக், சம்பூர்ணம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பூர்ணம் தலையில், பலத்த ரத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மொடக்குறிச்சி போலீசார், பைக் ஓட்டி வந்த யோகேஸ்வரன், 23, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ