டிப்பர் லாரி மோதி எலக்ட்ரீஷியன் பலி
பவானி,பவானி அருகே, ஜம்பை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசு, 32. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம், 12:30 மணியளவில், ஜம்பையில் இருந்து அத்தாணிக்கு ஹோண்டா பைக்கில் சென்றார். கைகாட்டி அருகே வரும் போது, எதிரே வந்த மினி டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில் துாக்கி வீசப்பட்டு தமிழரசு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் அந்தியூர் அருகே முனியப்பம்பாளையத்தை சேர்ந்த, செல்வராஜ், 40, என்பவரை ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.