| ADDED : ஆக 28, 2011 01:20 AM
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்குள் டூ வீலர் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில், கலெக்டர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான டூ வீலர்கள் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டார். பஸ் ஸ்டாண்டு வளாகத்துக்குள் டூ வீலர் நிறுத்த அனுமதிக்க கூடாது. மீறி நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு, போலீஸாருக்கு உத்தரவிட்டார். ஆட்டோக்களை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். பஸ்களை வரிசையாக நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவுட் போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள கழிப்பறையை இடித்து, சாக்கடை நீர் செல்லும் வகையில் சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களில் அசுத்தம் செய்வோர் மீது மாநகராட்சி சட்டப்படி அபராதம் விதிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.