ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதி வாக்காளர் பட்டியல் தல தணிக்கை
ஈரோடு: ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தலத்தணிக்கை நடந்தது.தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தின் ஒரு பகுதியாக கடந்த அக்., 29 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் ஜன., 6 ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக, ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு உப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், நேற்று ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதியில் தலத்தணிக்கை செய்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்தவர்கள் வீடுகளுக்கு சென்று, உறுதி செய்தார்.காளைமாட்டு சிலை, மாணிக்கம்பாளையம், பெரிய அக்ரஹாரம், ஈ.பி.பி., நகர் என பல்வேறு பகுதிகளில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி ஆணையர் மணீஷ், ஆர்.டி.ஓ., ரவி, தாசில்தார் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.