உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி அணை அருகே குவிந்துள்ள குப்பை

கொடிவேரி அணை அருகே குவிந்துள்ள குப்பை

கோபிசெட்டிபாளையம்:கொடிவேரி கொடிவேரி அணைக்கு செல்லும் வழியில் கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்து கிடப்பதால், சுற்றுலாப் பயணிகளை முகம் சுழிக்கின்றனர். ஆடிப் பெருக்கு பண்டிகை நெருங்குவதால், இவற்றை சுத்தம் செய்ய வேண்டும். கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் வகையில், பொங்கி வரும் அருவிகள் அமைந்துள்ளன. ஈரோடு, கோவை, திருப்பூர், தர்மபுரி, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் இங்கு தினசரி வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக, கொடிவேரி அணையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நீரூற்று பகுதியில் கூடுதல் தடுப்பு கம்பிகள், தடுப்பு சுவர் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிறன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. மற்ற நாட்களில் குறைந்தளவே சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.பவானிசாகர் அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 800 கன அடியும், ஆற்றில் 300 கன அடி தண்ணீரும் செல்கிறது. இதனால், தடுப்பணையில் சில இடங்களில் மட்டுமே அருவி கொட்டுகிறது.அடுத்த வாரம் ஆடிப் பெருக்கு கொண்டாடப்பட உள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் புதுமணத் தம்பதிகள் ஆற்றில் நீராடி, பல்வேறு சடங்குகள் செய்வர். அருகில் உள்ள முனியப்பன் கோவில், ராமர் கோவில்களில் வழிப்பாடு நடத்தி செல்வர். அன்று கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கானோர் குவிவர்.கொடிவேரி அருவிக்கு செல்லும் வழியில் கிழிந்த துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இது சுற்றுலாப் பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிய உள்ள நேரத்தில், கொடிவேரி அணைப் பகுதியில் சிதறி கிடக்கும் கழிவுப் பொருட்களை அகற்ற வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை