உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாட்டரி விற்போர் மீதுவழிப்பறி வழக்கு

லாட்டரி விற்போர் மீதுவழிப்பறி வழக்கு

கோபிசெட்டிபாளையம்: லாட்டரி விற்போரை பிடித்து சென்று, வழிப்பறி வழக்கு பதிவு செய்கின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பெருந்துறை, சித்தோடு, பவானி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில், தி.மு.க., ஆட்சியில் லாட்டரி விற்பனை ஜோராக நடந்தது. கணக்கு காண்பிப்பதற்காக, 10 லட்டரி மற்றும் 50 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்குபதிவு செய்து வந்தனர்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் லாட்டரி வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர். கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மூலம், கோவை மண்டலம் முழுவதும் லாட்டரி சப்ளை செய்யப்பட்டு, விற்பனை நடக்கிறது. லாட்டரி மீதான தடையில் தமிழக அரசு கெடுபிடியாக உள்ளது.ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் லாட்டரி விற்போரை பிடிக்கும் போலீஸார், அவர்கள் மீது வழிப்பறி அல்லது கஞ்சா விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்கின்றனர்.கோவை மண்டலத்தில் லாட்டரி விற்பனை இல்லை என்பதை கணக்கு காட்டுவதற்காக, இவ்வாறு போலீஸார் பொய் வழக்கு போடுவதாக புகார் எழுந்துள்ளது.லாட்டரி விற்பனையை மறைக்கும் முயற்சியை கைவிட்டு, லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை