| ADDED : ஆக 04, 2011 01:55 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே கோவிலூரில் புகுந்த நான்கு யானைகள், வாழை,
மக்காச்சோளப் பயிர்களை நாசம் செய்தன.அந்தியூரை அடுத்த கோவிலூரில் வனத்தை
ஒட்டிய பகுதியில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், வாழை, பருத்தி,
மக்காச்சோளம் பயிர்கள் சாகுபடியாகியுள்ளன. அவ்வப்போது, காட்டுக்குள்
இருந்து வெளியே வரும் யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள், பயிர்களை
சாப்பிடுவதுடன், அவற்றை மிதித்து நாசமாக்குகின்றன.கோவிலூர் புதுக்காட்டை
சேர்ந்த கைலாசம் என்பவரம். தனது நிலத்தில், ஒரு ஏக்கரில் வாழையும், இரண்டு
ஏக்கரில் மக்காச்சோளமும் பயிரிட்டுள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு, வாழை
மற்றும் மக்காச்சோளம் பயிரை நான்கு யானைகள் சாப்பிட்டுக்
கொண்டிருந்தன.அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்களுக்கு தகவல்
கொடுத்ததையடுத்து, பத்துக்கும் மேற்பட்டவர்கள் யானையை விரட்டும்
முயற்சியில் இறங்கினர்.ஆனால், எந்த சத்தத்துக்கும் கவலைப்படாமல் அவை,
வயலுக்குள் நின்று கொண்டிருந்தன. வயிறு நிறையும் வரை சாப்பிட்ட நான்கு
யானைகளும், அதிகாலை 6 மணிக்கு தோட்டத்தை விட்டு வெளியேறின. 50 ஆயிரம்
ரூபாய் மதிப்பிலான பயிர்களை நாசம் செய்து சென்றன.