உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடி கரூர் ரோட்டில் வேகத்தடை அவசியம்

கொடுமுடி கரூர் ரோட்டில் வேகத்தடை அவசியம்

கொடுமுடி: கொடுமுடியில் அகலப்படுத்தப்பட்ட ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.ஈரோடு - கரூர் நெடுஞ்சாலையில், கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. இந்த இடத்தில் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கோவை ரோடு, கொடுமுடி ஊருக்குள் செல்லும் ஆகிய ரோடுகளும் சந்திக்கின்றன. நான்கு ரோடுகள் சந்திக்கும் இப்பகுதியில், வணிக நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற அலுவலகங்கள் அதிகம் உள்ளன. இதனால், மக்கள் நடமாட்டமும் அதிகம்.

விபத்தை தவிர்க்க இப்பகுதியில் ரோட்டின் நடுவே தடுப்பு கம்பிகளும், வேகத்தடையும் இருந்தன. சமீபத்தில் இந்த ரோடு அகலப்படுத்தப்பட்டது. அப்போது, ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு கம்பிகள் மற்றும் வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ரோடு பணி முடிவுற்ற நிலையில், மீண்டும் தடுப்பு கம்பிகளை வைக்கவில்லை. பயணிகளை ஏற்ற போட்டி போடும் பஸ்கள், ஒன்றையொன்று முந்திச் செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள் புத்தகச் சுமையுடன் ஓடிச் சென்று ரோட்டை கடக்கின்றனர். எனவே, ரோட்டின் நடுவே தடுப்பு கம்பிகளை வைப்பதுடன், ரோட்டின் இருபுறமும் வேகத்தடையும் வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை