உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மையத்தில் 50 டன் விதை நெல் கையிருப்பு

ஈரோடு மையத்தில் 50 டன் விதை நெல் கையிருப்பு

ஈரோடு: கீழ்பவானி அணை நீர் திறப்பையொட்டி விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய ஈரோடு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் 50 டன் விதை நெல் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.கீழ்பவானி பாசனத்துக்கு, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறும் வகையில், நேற்று முன்தினம் நீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் கரும்பு, வாழை, நெல் உள்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர். ஈரோடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்ய 50 டன் விதை நெல், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.வேளாண் அதிகாரி கூறியதாவது:கீழ்பவானி பாசனத்தில், ஈரோடு தாலுகாவில் 2,800 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஏற்கனவே, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் 1,200 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாசனத்துக்கு தேவையான 50 டன் விதை நெல் ஈரோடு, சித்தோடு குடோனில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.,-20, ஏ.டி.,-38, ஏ.டி.,-39, டி.பி.டி., ஏ.எஸ்.டி.,-16 (குண்டு), கோ-43 ஆகிய ரக விதைநெல்கள் கையிருப்பில் உள்ளது. ஒரு கிலோ விதை நெல் 20.10 ரூபாய். அரசு அளிக்கும் மானியம் ஐந்து ரூபாய் தள்ளுபடி போக 15.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.நெல்லுக்கு தேவையான நுண்ணூட்ட சத்தான ஜிங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ வழங்கப்படுகிறது. அதன் விலை 34.50 ரூபாய். அரசு மானியம் போக 17.25 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அதேபோல், அசோஸ்பைரில்லம் 200 கிராம் கொண்ட பாக்கெட் ஒன்று ஆறு ரூபாய். அரசு மானியம் போக மூன்று ரூபாய்க்கு பாக்கெட் வழங்கப்படுகிறது.திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு அரசு ஒரு ஹெக்டேருக்கு 3,000 ரூபாய் மானியம் அளிக்கிறது. அதில் களையெடுக்கும் கருவி, மார்க்கர் கருவி, இடு பொருட்கள் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், நடவு மானியமாக மீதியுள்ள தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 65 ஏக்கரில் விதைப்பண்ணை அமைக்கப்படுகிறது. அதற்கான விதை நெல் மற்றும் நுண்ணூட்ட சத்தான ஜிங்க் சல்பேட் நேற்று குடோனுக்கு வந்தது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ