உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவ, மாணவியர் விடுதிகளில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவு

மாணவ, மாணவியர் விடுதிகளில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவு

ஈரோடு: அரசு மாணவர் விடுதிகளில் மருத்துவ முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.ஈரோட்டில் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் காமராஜ் பேசியதாவது:அரசு விடுதிகளில், மாணவ, மாணவியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது விடுதி காப்பாளரின் கடமை. விடுதியில் நல்ல அரிசி, காய்கறி மூலம், தரமான உணவு தயாரித்து, குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். தினமும் விடுதி உணவு பட்டியலில் உள்ளபடி உணவு வழங்க வேண்டும். விடுதி, குளியலறை, கழிப்பறையை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். மழை நேரத்தில் காய்ச்சியும், மற்ற நேரம் நல்ல குடிநீரை வழங்க வேண்டும்.விடுதி மாணவர்கள் பொது அறிவை வளர்க்கும்படி நாளிதழ்கள் வாங்கி படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். விடுதியில் மாணவர்கள் பாடங்களை முறையாக படிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் குறைவான மார்க் பெற்றால், அதற்கான காரணத்தை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் அறிந்து, அம்மாணவர் நன்கு படிக்க உதவ வேண்டும்.விடுதிகளில் காலமுறைப்படி மருத்துவ முகாம் நடத்த வேண்டும். ரத்தசோகை, கண் குறைபாடு போன்றவை கண்டறிந்தால், உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படும். விடுதி முகாம் நடந்த நாள், பயன்பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை, மாணவர்களுக்கான பிரச்னை போன்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்.மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சோப்பு, எண்ணெய் போன்றவை காலத்தில் வழங்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்களது எதிர்காலம் குறித்த வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.ஆர்.டி.ஓ., சுகுமார், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜகோபால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் யுவராஜ், இணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் ராஜசேகர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை