உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெளிப்படை கவுன்சிலிங்ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

வெளிப்படை கவுன்சிலிங்ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

காங்கேயம்: தமிழக அரசு பள்ளிகளில் மூன்று பருவ பாடமுறையை வரவேற்று, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியது.கூட்டணியின் காங்கேயம் கிளை ஆண்டு விழா, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கம் என முப்பெரும் விழா நடந்தது. வட்டார தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். செயலாளர் பிரபுசெபாஸ்டின், பொருளாளர் வெங்கடேஸ்வரன், மாநில பொது செயலாளர் செல்வராஜன், முன்னாள் பொது செயலாளர் நடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் பானுஸ்ரீ கார்த்திகா ஆகியோர் பேசினர்.பள்ளிக் கல்வி மேம்படும் வகையில் ஆசிரியர் நியமனம், செயற்கைகோள் வழிகற்றல், முப்பருவ முறை தேர்வு, துப்புரவு பணியாளர் நியமனம் என பல அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டதை வரவேற்பது.ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிப்படையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலரால் அளிக்கப்படும் மாறுதல் ஆணைகள் ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ