உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 724 கால்நடைகளுக்கு இலவசமாக சிகிச்சை

724 கால்நடைகளுக்கு இலவசமாக சிகிச்சை

கோபிசெட்டிபாளையம்: ஊட்டி மத்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம், கோபி அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அயலூர் நீர்ப்பிடிப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடை மேம்பாட்டுக்கான மருத்துவ முகாம் செம்மாண்டபாளையத்தில் நேற்று நடந்தது.வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேசன் முகாமை துவக்கி வைத்தார். மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி தரம்வீர் சிங், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பழனிசாமி ஆகியோர் பேசினர். முகாமில் 45 எருமை, 117 பசு, 22 ஆடு, 540 வெள்ளாடு என மொத்தம் 724 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஊசி, சினை ஆய்வு, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்கம் போன்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. வேளாண் பொறியியல் விஞ்ஞானி செல்வி, அயலூர் நீர் பிடிப்பு பகுதி சங்க தலைவர் சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர். இன்று மல்லிபாளையத்தில் காலை 8 முதல் ஒரு மணி வரையும், நாளை ஓடைமேட்டிலும் முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை