உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் வேளாண்நிறுவனத்தில் தீ விபத்து

கோபியில் வேளாண்நிறுவனத்தில் தீ விபத்து

கோபிசெட்டிபாளையம்: கோபியில் வேளாண் இடுபொருள் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.கோபி நாகர்பாளையம் ரோடு சீத்தம்மாள் காலனியில், 'வில்குரோ' என்ற விவசாய இடுபொருள் கம்பெனி உள்ளது. கம்பெனிக்கு அருகேயும், மேல் மாடியிலும் கூரை கொட்டகை இருந்தது.நேற்று காலை கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.கம்பெனியில் இருந்தவர்கள், விரைந்து செயல்பட்டு, கொட்டகையில் இருந்த இரு கார்களையும் வெளியில் எடுத்தனர். அதற்குள் கொட்டகை முழுவதும் தீ பரவி, கம்பெனியின் மேல்மாடியில் உள்ள கூரை வீட்டுக்கு பரவியது. கோபி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கொட்டகையில் நிறுத்தப்பட்டு இருந்த இரு கார்களும் காஸ் பொருத்தப்பட்டவை. அவற்றை அகற்றாமல் விட்டிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ